கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க நடமாடும் ஆம்புலன்ஸ் - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்

கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க நடமாடும் ஆம்புலன்ஸ் சேவையை கொடியசைத்து அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

Update: 2019-11-10 22:30 GMT
ஆரணி,

கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நடமாடும் கால்நடை மருத்துவ அவசர ஊர்தியான அம்மா ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா செய்யாறு தாலுகா, மேல்சீசமங்கலம் கிராமத்தில் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ., கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் முகமதுகாலித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை உதவி இயக்குனர் டாக்டர் வெங்கடேஷ் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு நடமாடும் கால்நடை மருத்துவ அவசர ஊர்தியான அம்மா ஆம்புலன்ஸ் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார்.

இதில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் பி.ஆர்.ஜி.சாந்திசேகர், அ.கோவிந்தராசன், வக்கீல் கே.சங்கர், விமலாமகேந்திரன், திருவண்ணாமலை மாவட்ட ஆவின் துணைத்தலைவர் பாரி பி.பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்