கீழ்ப்பாக்கம் மன நல காப்பகத்தில் பெண் கைதி தூக்குப்போட்டு தற்கொலை

கீழ்ப்பாக்கம் மன நல காப்பகத்தில் சிகிச்சை பெற்றுவந்த பெண் கைதி, குளியல் அறையில் உள்ள ஜன்னலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2019-11-21 22:14 GMT
சென்னை,

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம், நலகொண்டான்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜம்மாள்(வயது 65). இவர், வழக்கு ஒன்றில் சிறை தண்டனை பெற்று, வேலூர் சிறையில் கடந்த சில மாதங்களாக அடைக்கப்பட்டு இருந்தார்.

இந்தநிலையில் ராஜம்மாள், கடந்த மார்ச் மாதம் சிகிச் சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மன நல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

நேற்று காலை வெகு நேரமாகியும் மன நல காப்பகத் தில் உள்ள ஒரு குளியல் அறையின் கதவு மட்டும் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த காப்பக ஊழியர்கள், அந்த குளியல் அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கு கைதி ராஜம்மாள், தனது துண்டு மூலம் குளியல் அறை ஜன்னலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உறவினர்கள் பார்க்க வரவில்லை

இதுபற்றி தகவல் அறிந்துவந்த கீழ்ப்பாக்கம் போலீசார், ராஜம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், மன நல காப்பகத்தில் சிகிச்சை பெற்றுவந்த ராஜம்மாளை, அவரது உறவினர்கள் யாரும் வந்து பார்க்க வரவில்லை என தெரிகிறது. இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக புலம்பிய படியே இருந்த அவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்