சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ரூ.7½ கோடியில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கும் பணி கலெக்டர் ஆய்வு

மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் 92 இடங்களில் ரூ.7½ கோடி மதிப்பில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கும் பணிைய கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2019-11-24 23:00 GMT
கிரு‌‌ஷ்ணகிரி,

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக கிரு‌‌ஷ்ணகிரி அணைகட்டு பூங்கா, அவதானப்பட்டி சிறுவர் பூங்கா, கெலவரப்பள்ளி அணைகட்டு பூங்கா, பாம்பாறு அணைகட்டு பூங்கா, உள்ளிட்ட 92 இடங்களில் ரூ.7.55 கோடி மதிப்பில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக முதல்-அமைச்சர் உத்தரவுப்படி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக, மாவட்டத்தில் சுற்றுலாத்தலங்களான கிரு‌‌ஷ்ணகிரி அணைகட்டு பூங்கா, அவதானப்பட்டி சிறுவர் பூங்கா, கெலவரப்பள்ளி அணைகட்டு பூங்கா, பாம்பாறு அணைகட்டு பூங்கா, ஒரப்பம் ஸ்ரீபா‌‌ஷ்வா பத்மாவதி கோவில், அய்யூர் இயற்கை சூழல் பூங்கா, தளி பூங்கா, பெட்டாமலைக் கோவில், சந்திரசூடேஸ்வரர் கோவில், ராஜாஜி நினைவு இல்லம் தொரப்பள்ளி ஆகிய இடங்களில் தெரு மின் விளக்குகள், உயர் கோபுர மின் விளக்குகள் 92 இடங்களிலும் மற்றும் முக்கிய பிரதான சாலைகளான தேசிய, மாநில, ஊரக நெடுஞ்சாலைகளில் ஒளிரும் வழிகாட்டி மற்றும் பெயர் பலகைகள் அமைக்கப்பட உள்ளது.

சுற்றுலா பயணிகள்

மேலும் ஓட்டல் தமிழ்நாடு கிரு‌‌ஷ்ணகிரி, ஓட்டல் தமிழ்நாடு ஓசூர் ஆகிய இடங்களுக்கு சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பதற்காகவும், மாவட்ட கலெக்டர் அலுவலகம், புதிய பஸ் நிலையம், ஓட்டல் தமிழ்நாடு கிரு‌‌ஷ்ணகிரி, ஓட்டல் தமிழ்நாடு ஓசூர் ஆகிய இடங்களுக்கு மாவட்ட சுற்றுலா தகவல் வரைபட பலகை நிறுவிடவும் ரூ.7.55 கோடி மதிப்பீட்டில் தற்பொழுது பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பாகவும் தமிழக சுற்றுலாத்துறை சார்பாகவும் சுற்றுலா தலங்களை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தெரிந்துகொள்ளும் வகையில் ஒளிரும் போர்டு அமைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் உமாசங்கர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மோகன், வட்டார வளர்ச்சி அலுவலர் உமாமகேஸ்வரி, ஒன்றிய பொறியாளர் செல்வம், பணி மேற்பார்வையாளர் அம்பிகா, அவதானப்பட்டி பூங்கா மேலாளர் சிவகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்