கவர்னர் வருகையை முன்னிட்டு அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது

கவர்னர் வருகையை முன்னிட்டு அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் கலெக்டர் பிரவீன் நாயர் தலைமையில் நடைபெற்றது.

Update: 2019-11-28 22:45 GMT
நாகப்பட்டினம்,

நாகை மீன்வள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக நாளை(சனிக்கிழமை) தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாகை வருகிறார். இதனை முன்னிட்டு நாகை கலெக்டர் அலுவலகத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம், ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரசாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், நாகை மீன்வள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க, தமிழக கவர்னர் நாகைக்கு வருவதை முன்னிட்டு மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தடையில்லா மின்சாரம்

போலீஸ் துறை சார்பில் கவர்னர் தங்குமிடம் மற்றும் பயணிக்கும் வழி தடங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். சுகாதாரத்துறை சார்பில் அவசர சிகிச்சை, மருத்துவர்கள் குழு மற்றும் அவசர கால ஊர்திகள் தயாராக வைத்திருக்க வேண்டும். தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி னார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்