238 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழங்கினார்

238 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழங்கினார்.

Update: 2019-12-02 22:30 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூரில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் முதியோர் உதவித்தொகை, விதவை பெண்களுக்கு உதவித் தொகை, கணவரால் கைவிடபட்ட பெண்களுக்கு உதவித் தொகை, ஊனமுற்றோர் உதவித் தொகை, அகதிகள் ஆகியோருக்கு நலத்திட்ட உதவிகளையும், மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தையும் 238 பயனாளிகளுக்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் சந்திரபிரபா முத்தையா,ராஜவர்மன் மற்றும் நகரச் செயலாளர் இன்பத்தமிழன் மாவட்ட மத்திய வங்கி தலைவர் மயில்சாமி, நிலவள வங்கி தலைவர்முத்தையா, மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சிந்துமுருகன், அதிகாரிகள், அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விழாவில் அமைச்சர் பேசியதாவது:- மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏழை எளிய மக்களுக்கும், ஆதரவற்ற அத்தனை பெரியவர்களுக்கும், விதவைகளுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்கியவர்.அதனை நிறைவேற்றி வருகிறார் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. சிலருடைய மனுக்கள் நிராகரிகப் படுகிறது.

அதற்கு முதல்-அமைச்சரிடம் தெரிவித்து ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி அனைவருக்கும் உதவித்தொகை 1000 ரூபாய் கிடைக்க ஏற்பாடு செய்து நிராகரித்த மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டும், வீடு இல்லாதவர்களுக்கும், வீடுகள் இருந்தும் பட்டா இல்லாதவர்களுக்கும், இலவச பட்டா வழங்கப்பட்டும் பயனாளிகளுக்கு தமிழக அரசினால் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்