கடன் கிடைக்காத ஆத்திரத்தில், வங்கிக்குள் புகுந்து புரோக்கரை பொம்மை துப்பாக்கியால் தாக்கிய தொழில் அதிபர்

கடன் கிடைக்காத ஆத்திரத்தில் வங்கிக்குள் புகுந்து புரோக்கரை பொம்மை துப்பாக்கியால் தாக்கியும், மேலாளர்,ஊழியரை கத்தியால் குத்திய தொழில் அதிபரை போலீசார் கைது செய்தனர். இந்த பரபரப்புசம்பவம்குறித்து போலீஸ்தரப்பில்கூறப்பட்டதாவது:-

Update: 2019-12-04 22:30 GMT
கோவை,

கோவை அருகே உள்ள சோமையம்பாளையத்தை சேர்ந்தவர் வெற்றிவேலன் (வயது 44). தொழில் அதிபரான இவர் கோவைசித்தாபுதூர்,ஒண்டிப்புதூர்பகுதிகளில் ஒர்க் ஷாப்புகளை நடத்தி வருகிறார். இவருடைய தொழிலுக்கு பணம் தேவைப்பட்டது.இதற்காக கோவைதிருச்சிரோடுசுங்கம் பகுதியில் உள்ள கனராவங்கியில் ரூ.1கோடி கடன்கேட்டு அதற்கான ஆவணங்களையும் அளித்தார்.

அப்போது கோவை டாடாபாத்தை சேர்ந்த புரோக்கர் குணபாலன் என்பவர் வெற்றிவேலனுக்கு அறிமுகம் ஆனார். தனக்கு வங்கியில் உள்ளஅனைவரையும் தெரியும். இதற்கு கமிஷனாக ரூ.6 லட்சம் தர வேண்டும் எனவும் குணபாலன்கேட்டு உள்ளார். இதற்கு சம்மதித்த வெற்றிவேலன் முதல் தவணையாக ரூ.3லட்சத்தை புரோக்கரிடம் கொடுத்ததாக தெரிகிறது.

இதற்கிடையே வங்கியில் வெற்றிவேலன் கொடுத்த ஆவணங்கள் திரும்பி வந்தது.அவருக்கு கடன்கொடுக்க முடியாது என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து வெற்றிவேலன் வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது ‘நீங்கள் வேறு ஒரு தனியார் வங்கியில் கடன் வாங்கி உள்ளீர்கள். அதனை முறையாக செலுத்தவில்லை. எனவே உங்களுக்கு கடன்தர வாய்ப்பு இல்லை’ என்று தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது என கூறிஉள்ளனர்.

இதனால் வெற்றிவேலன் கோபம் அடைந்தார். கடன் வாங்கி தருவதாக கூறிரூ. 3 லட்சத்தை ஏமாற்றியகுணபாலன் மீதும் அவருக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

இந்த நிலையில் புரோக்கர் குணபாலன் கனராவங்கியில் இருப்பதாக வெற்றிவேலனுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அவர் வங்கிக்கு சென்றார். அப்போது புரோக்கர் குணபாலன், வங்கி மேலாளர் சந்திரசேகருடன் பேசிக் கொண்டு இருந்தார்.

ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த வெற்றிவேலன் தனது கையில் இருந்ததுப்பாக்கியை புரோக்கர் குணபாலனின் தலையில்வைத்து சுட்டு விடுவதாக மிரட்டினார். மேலும் துப்பாக்கியாலும் தாக்கினார். இதனை பார்த்த வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் வெற்றிவேலனை தடுத்தனர். அப்போது துப்பாக்கி கீழே விழுந்தது.

ஆனாலும் ஆத்திரத்தில் இருந்த வெற்றிவேலன், வங்கி மேலாளர் சந்திரசேகர் மற்றும் ஊழியரை கத்தியால்குத்தினார். இதில்அவர்களுக்கு கைகளில் காயம் ஏற்பட்டது. இதனால் வங்கியில் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் ஏதோ கொள்ளையன் தான் புகுந்துவிட்டானோ என்று கருதிய வாடிக்கையாளர்கள் வங்கியில் இருந்து ஓட்டம் பிடிக்கத்தொடங்கினர். இந்த களேபாரத்துக்கிடையே சுதாரித்துக்கொண்ட ஊழியர்கள் ஒன்று திரண்டு வெற்றிவேலனை மடக்கிப்பிடித்து ரேஸ்கோர்ஸ்போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, போலீசார்சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுவெற்றிவேலனைமடக்கி பிடித்தனர். மேலும் அவர் வைத்திருந்ததுப்பாக்கியையும்பறிமுதல் செய்தனர். அப்போது அதுபொம்மை துப்பாக்கிஎன்பது தெரியவந்தது.அதன்பின்னரேவங்கி ஊழியர்கள் நிம்மதி அடைந்தனர்.

இதனை தொடர்ந்து தொழில் அதிபர்வெற்றிவேலனைபோலீசார்கைது செய்தனர். அவர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளில்வழக்குப்பதிவுசெய்யப்பட்டது. பின்னர் அவர் கோர்ட்டில்ஆஜர்படுத்தப்பட்டு கோவைமத்திய சிறையில்அடைக்கப்பட்டார்.புரோக்கர் மற்றும் வங்கி மேலாளரைவெற்றிவேலன்தாக்கியகாட்சி கண்காணிப்புகேமராவில்பதிவாகி இருந்தது.இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.

கடன் கிடைக்காத ஆத்திரத்தில் புரோக்கரை பொம் மைதுப்பாக்கியால்தாக்கியும், வங்கி மேலாளர் மற்றும் ஊழியரை கத்தியால்குத்திய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்