தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் தரையில் படுக்கக்கூடிய அவலம்

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் தரையில் படுக்கக்கூடிய அவலநிலை நிலவுகிறது.

Update: 2019-12-04 22:45 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி திருவாரூர், நாகை, அரியலூர், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். நோயாளிகளின் வருகைக்கு ஏற்ப படுக்கை வசதிகளை அதிகப்படுத்தி புதிய கட்டிடங்களும் கட்டப்பட்டு வருகிறது.மருத்துவமனையில் உள்ள பழைய கட்டிடத்தில் ஆண்களுக்கு, பெண்களுக்கு தனித்தனி வார்டுகள் உள்ளன.

படுக்கை வசதி

இவற்றில் பெண்களுக்கான வார்டில் போதிய படுக்கை வசதி இல்லை. இதனால் சிகிச்சைக்காக வருபவர்கள் தரையில் பாயில் படுக்க வேண்டிய அவலநிலை உள்ளது. ஏற்கனவே பரவலான மழை காரணமாக தரைபகுதி குளிர்ந்து காணப்படுகிறது.

அப்படி குளிரக்கூடிய தரையில் பாய் விரிக்கப்பட்டு அதில் படுக்க சொல்வதால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே படுக்கை வசதிகளை அதிகப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப் பாகும்.

மேலும் செய்திகள்