விசாகப்பட்டினத்தில் இருந்து சரக்கு ரெயிலில் 2,600 டன் பொட்டா‌‌ஷ் உரம் தஞ்சை வந்தது

விசாகப்பட்டினத்தில் இருந்து சரக்கு ரெயிலில் 2,600 டன் பொட்டா‌‌ஷ் உரம் தஞ்சை வந்தது.

Update: 2019-12-12 22:30 GMT
தஞ்சாவூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம ்(தஞ்சை, நாகை, திருவாரூர்) விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி நடைபெறும். மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதை பொறுத்து இதன் சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும்.

தற்போது இந்த மாவட்டங்களில் சம்பா, தாளடி சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கு தேவையான உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்து, விதை நெல் போன்றவை இருப்பு வைக்கப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

2,600 டன் பொட்டா‌‌ஷ்

இதற்காக வெளிமாநிலங்களில் இருந்து உரம் வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி விசாகப்பட்டினத்தில் இருந்து 2,600 டன் பொட்டா‌‌ஷ் உரம் சரக்கு ரெயிலின் 42 வேகன்களில் நேற்று தஞ்சைக்கு வந்தது. தஞ்சையில் இருந்து இந்த உரங்கள் தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும், தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன.

மேலும் செய்திகள்