கிரு‌‌ஷ்ணகிரியில் இன்று உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி கலெக்டர் ஆய்வு

கிரு‌‌ஷ்ணகிரியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உள்ளாட்சி தேர்தலில் பணிபுரியும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் பிரபாகர் ஆய்வு செய்தார்.

Update: 2019-12-14 23:00 GMT
கிரு‌‌ஷ்ணகிரி,

கிரு‌‌ஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ளாட்சி தேர்தலில் பணிபுரியும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பயிற்சி வழங்கப்படுகிறது. இதையொட்டி முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து கம்மம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட உள்ள வாக்குச்சாவடி மையத்தில் சாய்வுதளம், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி குறித்த முன்னேற்பாடு பணிகளை அவர் ஆய்வு செய்தார்.

அடிப்படை வசதிகள்

மேலும் வாக்குப்பதிவு அன்று வாக்காளர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி உதவி திட்ட அலுவலர் கல்யாணசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர் உமா மகேஸ்வரி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சர்தார், கணேசன், ராஜா மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்