துப்பாக்கி முனையில் வழிப்பறி செய்த 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

அவினாசி, பெருமாநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி முனையில் வழிப்பறி செய்த 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Update: 2019-12-14 22:32 GMT
அவினாசி,

திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் தெக்கலூர் வடுகபாளையம் பிரிவு அருகே ரங்கா நகர், பச்சாம்பாளையம், பெருமாநல்லூ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த அக்டோபர் மாதம் இரவு பணி முடிந்து செல்பவர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டி அவர்களிடமிருந்து செல்போன், தங்க நகைகள் மற்றும் பணத்தை மர்ம ஆசாமிகள் பறித்து சென்றனர்.

இந்த வழக்கில் அவனாசி போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ரஞ்சித் தாகூர் மகன் சாந்தன்குமார் (வயது 22), முகமதின் அன்சாரி மகன் முஸ்தபா அன்சாரி (25), அம்ரித்சிங் மகன் சாந்தன்குமார் (33), ஸ்ரீராம்லக்சமன்ஷா மகன் நாவல்ஷா ( 20) ஆகியோர் துப்பாக்கி முனையில் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜய கார்த்திகேயன் உத்தரவுப்படி, மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல் துப்பாக்கி முனையில் வழிப்பறி செய்த 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டனர். இந்த உத்தரவின் பேரில் அவர்கள் 4 பேரும் குண்டர் சட்டத்தில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்