பெரும்பாறை அருகே, கன மழையால் வீடு இடிந்தது

பெரும்பாறை அருகே கனமழையால் கூலித்தொழிலாளியின் வீடு இடிந்து விழுந்தது.

Update: 2019-12-16 22:00 GMT
பெரும்பாறை,

திண்டுககல் மாவட்டம் பெரும்பாறை, பண்ணைக்காடு, மஞ்சள்பரப்பு, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, கே.சி.பட்டி, பெரியூர், குப்பம்மாள்பட்டி பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழைபெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு மரங்கள் முறிந்து விழுந்தன.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, புல்லாவெளி பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தது.

இதன் காரணமாக நேற்று காலை பெரும்பாறை அருகே உள்ள மஞ்சள்பரப்பை சேர்ந்த கூலித்தொழிலாளியான தியாகராஜன் (வயது 45) என்பவரின் வீடு இடிந்து விழுந்தது. வீட்டின் மண்சுவர் வெளிப்புறம் இடிந்து விழுந்ததால் எந்தவித சேதமும் இல்லை. மேலும் வீட்டில் இருந்தவர்கள் பக்கத்து அறையில் இருந்ததால் அதிர்‌‌ஷ்டவசமாக உயிர்தப்பினர். இதுகுறித்து மணலூர் கிராம நிர்வாக அலுவலர் காளிதாசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இடிந்து கிடந்த வீட்டை பார்வையிட்டு வருவாய்த்துறை மூலம் நிவாரண உதவி கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்