மார்த்தாண்டம் மேம்பாலத்தில் காங்கிரீட் பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் காங்கிரீட் பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-12-26 23:00 GMT
குழித்துறை,

மார்த்தாண்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பம்மம் முதல் வெட்டுமணி வரை 2½ கிலோ மீட்டர் தூரம் நவீன இரும்பு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தின் அடிப்பகுதியிலும், பக்கவாட்டிலும் உள்ள காங்கிரீட் இடிந்து விழும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேம்பாலத்தின் பக்கவாட்டில் இருந்து ஒரு காங்கிரீட் ெபயர்ந்து விழுந்தது. அப்ேபாது பாலத்தின் அடியில் நடந்து சென்று கொண்டிருந்த நகைக்கடை காவலாளி ஒருவர் காயம் அடைந்தார்.

காங்கிரீட் பெயர்ந்தது

இந்தநிலையில், நேற்று மார்த்தாண்டம் சந்திப்பில் இருந்து பஸ் நிலையத்துக்கு திரும்பும் வளைவு பகுதியில் மேம்பாலத்தின் அடியில் இருந்து ஒரு பெரிய காங்கிரீட் பெயர்ந்து விழுந்தது. இதை பார்த்த பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அதிர்ச்சி அடைந்தனர். காங்கிரீட் பெயர்ந்து விழுந்த போது அந்த பகுதியில் யாரும் நடந்து செல்லாததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்த சம்வத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சமீபத்தில் கட்டப்பட்ட இந்த மேம்பாலத்தில் ஆங்காங்கே பழுதுகளும், வெடிப்புகளும் உள்ளன. இதனால், மேம்பாலத்தை அவசரமாக பழுது பார்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்