திருக்கோவிலூர் அருகே, வீட்டின் கதவை உடைத்து நகை- பணம் கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

திருக்கோவிலூர் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை -பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-12-28 22:30 GMT
திருக்கோவிலூர், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மேலத்தாழனூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் அய்யப்பன் (வயது 29). இவர் தனது குடும்பத்தினருடன் பெங்களூருவில் தங்கியிருந்து கூலி வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று இவருடைய வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை அக்கம்பக்கத்தினர் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுபற்றி செல்போன் மூலம் அய்யப்பனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே இதுபற்றி அறிந்த திருக்கோவிலூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு மகே‌‌ஷ், இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் குணபாலன், உலகநாதன், மண்ணாங்கட்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டை பார்வையிட்டனர். அப்போது வீட்டில் இருந்த 3 பவுன் நகை, 300 கிராம் வெள்ளி பொருட்கள், ரூ.60 ஆயிரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து, ரூ. 2 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்