தூத்துக்குடி அருகே, இருதரப்பினர் இடையே கோ‌‌ஷ்டி மோதல்; 3 பேர் காயம் - 9 பேர் மீது வழக்கு

தூத்துக்குடி அருகே இருதரப்பினர் இடையே கோ‌‌ஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் 3 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக இருதரப்பையும் சேர்ந்த 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-01-05 22:15 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி அருகே உள்ள மேலசெக்காரக்குடியை சேர்ந்தவர் ராமசாமி மகன் முகே‌‌ஷ்(வயது 20). இவர் அந்த பகுதியில் காற்றாலைக்காக உபகரணங்களை ஏற்றி செல்லும் லாரிகள் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தாராம். இது தொடர்பாக முகேசுக்கும், அதே பகுதியை சேர்ந்த பட்டுக்கனி(42) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

சம்பவத்தன்று மேல செக்காரக்குடி கீழத்தெருவில் முகே‌‌ஷ், தனது நண்பருடன் சென்று கொண்டு இருந்தாராம். அப்போது அங்கு வந்த பட்டுக்கனி தரப்பினருக்கும், முகே‌‌ஷ் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கோ‌‌ஷ்டி மோதலாக மாறியது.

அவர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதில் காயம் அடைந்த முகே‌‌ஷ், பட்டுக்கனி, சரவணன் ஆகியோர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து இருதரப்பினரும் தனித்தனியாக புகார் அளித்தனர். புகாரின் பேரில் தட்டப்பாறை போலீசார் இருதரப்பையும் சேர்ந்த பட்டுக்கனி, சதீ‌‌ஷ், சந்துரு, சரவணன், கணேசன், பாலச்சந்தர், முகே‌‌ஷ், வெயிலுமுத்து, சுரே‌‌ஷ் ஆகிய 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்