ஊராட்சி தலைவர்கள்- போலீசார் ஆலோசனை

ஊராட்சி மன்ற தலைவர் கள்-போலீசார் பங்கேற்பு ஆலோசனை கூட்டம் ஆண்டிமடம் போலீஸ் நிலைய வளாகத்தில் நடைபெற்றது.

Update: 2020-01-07 22:09 GMT
வரதராஜன்பேட்டை,

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் கள்-போலீசார் பங்கேற்பு ஆலோசனை கூட்டம் ஆண்டிமடம் போலீஸ் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் விழிப்புணர்வு குழு குறைந்தபட்சம் 10 நபர்களுக்கு மேல் இருக்கும்படி உருவாக்க வேண்டும். அதில் அனைத்து இனத்தவர்கள் மற்றும் அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் இருக்க வேண்டும். கிராமங்களில் ஏற்படக்கூடிய சட்டம்- ஒழுங்கு பிரச்சினை யாவும் போலீஸ் நிலையத்திற்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். தங்கள் கிராமங்களில் சட்டத்திற்கு புறம்பான செயல்களான மது விற்பனை, சூதாட்டம், லாட்டரி சீட்டு, மணல் கடத்தல் போன்றவை நடந்தால் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தங்கள் கிராமங்களில் சந்தேக நபர்களின் நடமாட்டம் இருப்பின் அதை உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

தங்கள் பஞ்சாயத்துகளில் குறைந்தபட்சம் 100 கண்காணிப்பு கேமராக்களை அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 30 ஊராட்சி மன்ற தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்