குடியரசு தினவிழா ஆலோசனை கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடந்தது

குடியரசு தினவிழாவையொட்டி மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடா்பான ஆலோ சனை கூட்டம் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது.

Update: 2020-01-09 22:30 GMT
சிவகங்கை, 

வருகிற 26-ந்தேதி நடைபெறவுள்ள குடியரசு தினவிழாவையொட்டி மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடா்பான ஆலோசனை கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

இந்திய திருநாட்டின் சிறப்பு வாய்ந்த விழாவாக ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு நடைபெறவுள்ள குடியரசு தினவிழாவினை அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு சிறப்பாக நடத்திட வேண்டும். குறிப்பாக தியாகிகளை கவுரவிக்கும் வகையில் அவா்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்கி சிறப்பிக்க வேண்டும். கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ள மாணவ-மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் சான்றுகள் வழங்கி சிறப்பிக்க வேண்டும்.

நலத்திட்ட உதவி பெறுபவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் லதா, மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மங்களேஷ்வரன், மகளிர் திட்ட அலுவலா் அருண்மணி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குனா் வடிவேல், வருவாய் கோட்டாட்சியா்கள் செல்வகுமாரி, சங்கரநாராயணன், கலெக்டரின் நோ்முக உதவியாளா் ராமபிரதீபன், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியா் காளிமுத்தன், நிலஅளவைத்துறை உதவி இயக்குனா் யோகராஜ், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ராஜா மற்றும் அரசு அலுவலா்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்