35 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் உத்தவ் தாக்கரே மீது அதிருப்தி - நாராயண் ரானே சொல்கிறார்

35 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் உத்தவ் தாக்கரே மீது அதிருப்தியில் இருக்கின்றனர் என்று நாராயண் ரானே கூறினார்.

Update: 2020-01-12 23:00 GMT
மும்பை, 

மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும், பாரதீய ஜனதாவை சேர்ந்த மாநிலங் களவை எம்.பி. யுமான நாராயண் ரானே தானேயில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பாரதீய ஜனதாவிடம் 105 எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர். ஆனால் சிவசேனாவிடம் 56 எம்.எல்.ஏ.க்களே உள்ளனர். அவர்களில் 35 பேர் சிவசேனா கட்சி தலைமை (உத்தவ் தாக்கரே) மீது அதிருப்தியில் இருக்கின்றனர்.

எனவே மராட்டியத்தில் மீண்டும் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

உத்தவ் தாக்கரே அரசாங்கம் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. ஆனால் எப்போது தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்படவில்லை.

விவசாயிகள் கடன் தள்ளுபடி என்பது வெறும் பேச்சு தான். அரசாங்கத்தை நடத்துவது பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. மாநிலத்தில் ஆட்சி அமைப் பதற்கே அவர்களுக்கு 5 வாரம் தேவைப்பட்டது. இந்த அரசாங்கத்திடம் இருந்து நாம் எதை எதிர்பார்க்க முடியும்?

இவ்வாறு அவர் கூறினார்.

35 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் அக்கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக நாராயண் ரானே கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்