வில்லியனூர் அருகே, கோஷ்டி மோதலில் அண்ணன்-தம்பிக்கு கத்திக்குத்து

வில்லியனூர் அருகே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் அண்ணன்-தம்பிக்கு கத்திக் குத்து விழுந்தது.

Update: 2020-01-13 23:21 GMT
வில்லியனூர்,

வில்லியனூர் அருகே உள்ள சேந்த மங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சீனுவாசன். இவரது மகன் கள் ராமன்(வயது 31), லட்சுமணன்(31) இரட்டையர். இவர்களது வீட்டின் அருகில் வீரமணி (35) என்ற பெயிண்டர் வீடுகட்டி வருகிறார். அதற்கு தேவையான கட்டுமான பொருட்களை சீனிவாசன் வீட்டு பகுதியில் வைத்திருந்தார். அந்த இடத்தில் ராமன் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தினார். இதனை கண்ட வீரமணியின் மனைவி சுமதி எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனால் இருதரப்பினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது.அப்போது ஆத்திரம் அடைந்த ராமன், சுமதியை பிடித்து கீழே தள்ளினார்.இந்த சம்பவத்தை நேரில் கண்ட வீரமணி ஆவேசம் அடைந்தார்.தன்னிடம் இருந்த கத்தியால் ராமனை குத்தினார்.மேலும் தடுக்க முயன்ற லட்சுமணனையும் அவர் கத்தியால் குத்தினார்.

இதைதொடர்ந்து ராமன் பதிலுக்கு வீட்டில் இருந்து கத்தியை எடுத்து வந்து வீர மணியை குத்தினார்.கத்திக்குத்தில் காயம் அடைந்த ராமன், லட்சுமணன் இருவரும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.இந்த சம்பவம் குறித்து இருதரப்பினரும் வில்லியனூர் போலீசில் தனித்தனியாக புகார் கொடுத்தனர்.போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்த குமார் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்