குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக ஊர்வலம்: முஸ்லிம் அமைப்பினர் 1,000 பேர் மீது வழக்கு

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக ஊர்வலம் நடத்திய முஸ்லிம் அமைப்பினர் 1,000 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-01-14 22:00 GMT

திருச்சி, 

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக திருச்சியில் நேற்று முன்தினம் இஸ்லாமிய இயக்க கூட்டமைப்பினர் ஊர்வலம் நடத்தினர். தில்லைநகர் பாஸ்போர்ட்டு அலுவலகம் அருகே இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் கோர்ட்டு அருகே எம்.ஜி.ஆர். சிலையை வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தின் போது எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு பலூன்களை பறக்க விட்டனர். இந்த நிலையில் போலீஸ் அனுமதியின்றி ஊர்வலம் நடத்தியதாக முஸ்லிம் அமைப்பை சேர்ந்த 1,000 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் செசன்சு கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக விமானநிலையம் அருகே வயர்லெஸ் ரோட்டில் நேற்று முன்தினம் இரவு பொதுக்கூட்டம் நடத்தியதாக முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் 13 பேர் உள்பட பலர் மீது விமானநிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மேலும் செய்திகள்