சுல்தான்பேட்டை அருகே மதுவிருந்தின்போது பயங்கரம்: கல்லால் தாக்கி காவலாளி படுகொலை - நண்பர்கள் 2 பேர் கைது

சுல்தான்பேட்டை அருகே மது விருந்தின்போது காவலாளியை படுகொலை செய்த அவரது நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2020-01-18 23:00 GMT
சுல்தான்பேட்டை,

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே செலக்கரச்சல் கிராமத்தைச்சேர்ந்தவர் பாப்பணன் என்கிற ரங்கசாமி (வயது 49). திருமணம் ஆகாதவர். காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், அதே பகுதியைச்சேர்ந்த ரங்க சாமி மற்றும் அவரது நண்பர்கள் லாரி டிரைவர் பாலசுப்பிரமணியம் (36), ஆறுமுகம் (52) ஆகியோர் ஒன்று சேர்ந்துபொங்கல் பண்டிகையன்று, அதே பகுதியை சேர்ந்த தங்களது மற்றொரு நண்பரானகிளி ஜோதிடர்தேவராஜ் என்கிற விவேகானந்தன் (60) என்பவர்வீட்டில் கோழி வறுவல் தயார் செய்து, மது விருந்து வைத்துள்ளனர். 4 பேரும் போதை ஏறியதும் உற்சாகமாக காணப்பட்டனர்.

பின்னர் போதை தெளிந்தவுடன் மது மற்றும் கோழிவறுவல் தயார் செய்த செலவு குறித்து ஒவ்வொருவரும் பேசி, செலவு தொகையை பங்கீடு செய்துள்ளனர். ஆனால், ரங்கசாமி தனக்குரிய செலவுதொகையை வழங்க மறுத்துள்ளார்.இதனால், ஆத்திரம்அடைந்த நண்பர்கள் பாலசுப்பிரமணியம், ஆறுமுகம், விவேகானந்தன் ஆகியோர் ஒன்று சேர்ந்துஅருகில்கிடந்த கல்லை எடுத்து ரங்கசாமியை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில், பலத்த காயமடைந்தஅவரை அருகில் உள்ளவர்கள்மீட்டு,கோவைஅரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்குஅனுப்பினர். அங்கு அனுமதிக்கப்பட்ட ரங்கசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் சூலூர் போலீஸ்இன்ஸ்பெக்டர்தங்கராஜ், சுல்தான்பேட்டைசப்-இன்ஸ்பெக்டர்கருணாகரன் தலைமையிலான போலீசார் விசாரணைநடத்தினர். விசாரணையில் ரங்கசாமியை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த அவரது நண்பர்கள் ஆறுமுகம், பாலசுப்பிரமணியை கைது செய்தனர். விவேகானந்தனை வலை வீசித் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்