மயிலாடுதுறையில் மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி பா.ம.க.வினர் ஊர்வலம்

மயிலாடுதுறையில் மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி பா.ம.க. சார்பில் ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2020-01-22 23:00 GMT
குத்தாலம்,

மயிலாடுதுறையில் மதுவிலக்கு, தரமான இலவச கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகளை வலியுறுத்தி பா.ம.க சார்பில் ஊர்வலம் நடந்தது. இதற்கு நகர செயலாளர் கமல்ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் காமராஜ் முன்னிலை வகித்தார். இதில் மாநில துணை பொதுச் செயலாளர் பழனிசாமி கலந்து கொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

ஊர்வலத்தில் மதுவிலக்கை உடனே அமல்படுத்த வேண்டும். மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் கிடைக்கும் கல்விக்கு இணையான கல்வி அனைத்து பள்ளிகளிலும் கிடைக்க செய்ய வேண்டும். ஏழைகளுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும். எல்.கே.ஜி. முதல் உயர் கல்வி வரை இலவச கல்வி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

துண்டு பிரசுரங்கள்

மேலும் தொண்டர்கள், கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வீடு வீடாக சென்று வழங்கினர். ஊர்வலம் மாப்படுகை ரெயில்வே கேட் அருகே தொடங்கி கல்லணை- பூம்புகார் சாலை, திருவிழந்தூர், சேந்தங்குடி உள்பட பல முக்கிய தெருக்களின் வழியாக சென்று வள்ளலார் கோவில் அருகே நிறைவடைந்தது. இதில் மாநில மகளிர் சங்க செயலாளர் தேவி குரு செந்தில், மாநில இளைஞர் சங்க செயலாளர் கண்ணகி சஞ்சீவி ராமன், மாவட்ட அமைப்பு செயலாளர் தங்க.செந்தில்நாதன், முன்னாள் நகர செயலாளர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்