மானியத்துடன் கடனுதவி கலெக்டர் வழங்கினார்

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு மகளிர் சுய உதவிக்குழு மற்றும் தாட்கோ ஆகியவற்றை சேர்ந்த 20 பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2020-01-28 22:30 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் ஜே.என். சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் மாவட்ட தொழில் மையம் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி ஆகியவை இணைந்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு மகளிர் சுய உதவிக்குழு மற்றும் தாட்கோ ஆகியவற்றை சேர்ந்த 20 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியே 13 லட்சம் மதிப்பிலான மானியத்துடன் கூடிய கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு கடனுதவிக்கான காசோலைகளை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.

அவருடன் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர் ஜெயக்குமார், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மணிவண்ணன், பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை மேலாளர் ராஜன், துணை கிளை மேலாளர் காயத்ரி லட்சுமி, வங்கி ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்