பல்லடம் அரசு கல்லூரிக்கு ரூ.8 கோடியில் புதிய கட்டிடம் - முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

பல்லடம் அரசு கல்லூரிக்கு ரூ.8 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதுபற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

Update: 2020-01-30 22:45 GMT
பல்லடம்,

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 7 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் 3 புதிய பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 2017-18-ம் கல்வியாண்டில் தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2017-ம் ஆண்டு ஜூன் 19-ந் தேதியன்று சட்டசபையில் அவை விதி 110-ன் கீழ் அறிவித்தார்.

அந்த அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ள 7 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒன்றான, திருப்பூர் மாவட்டம், பல்லடம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.8 கோடியில் கட்டப்பட்டுள்ள கல்விசார் மற்றும் நிர்வாகக் கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை தலைமை செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்தேக்கத் தொட்டிகள்; திருப்பூர் எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள 8 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 3 ஆய்வகக் கட்டிடங்கள்; உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மொத்தம் 91 கோடியே 91 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித்துறை கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக பல்லடத்தில் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற விழாவில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமை தாங்கினார். பல்லடம் எம்.எல்.ஏ கரைப்புதூர் நடராஜன், திருப்பூர் ஆர்.டி.ஓ. கவிதா,கல்லூரி முதல்வர் எழிலி, துணைமுதல்வர் ஜெயச்சந்திரன், நகராட்சி ஆணையாளர் கணேசன்,தாசில்தார் சிவசுப்பிரணியம், மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சித்துராஜ், கல்லம்பாளையம் ராமமூர்த்தி,வைஸ் பழனிசாமி,அண்ணாதுரை,தங்கலட்சுமி நடராஜன், டாக்டர் ராஜ்குமார், அரசுஅலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் பேராசிரியர்கள், கல்லூரி மாணவ,மாணவியர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம், மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவில் கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ. பேசும் போது, நான் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட போது தேர்தல் வாக்குறுதியாக பல்லடத்தில் அரசு கலைக்கல்லூரி அமைப்பேன், மங்கலம் சாலையை விரிவாக்கம் செய்வேன்,பல்லடத்தில் புறவழிச்சாலை அமைப்பேன் என்று வாக்குறுதி அளித்து இருந்தேன். இவற்றி்ல் அனைத்தையும் நிறைவேற்றிவிட்டேன். தற்போது பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.8 கோடியில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு அதன் திறப்பு விழாவில் கலந்து கொண்டேன். இதற்கு உறுதுைணயாக இருந்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

அதன் பிறகு அவர் ஒன்றிய குழுத்தலைவராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு திருத்தணி எம்.எல்.ஏ. பி.எம்.நரசிம்மன் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

அதன் பின்னர் மதியம் 3 மணியளவில் ஒன்றிய குழு துணைத்தலைவர் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. கவுன்சிலர்கள் யாரும் கலநது கொள்ளாததால் துணைத்தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக செயல்பட்ட காங்கிரஸ் கவுன்சிலர் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பத்மா ஆவார். இவர் அத்திமாஞ்சேரி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கோவிந்தராஜின் மனைவி ஆவார்.

தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. கவுன்சிலர் ஜான்சிராணி மனுதாக்கல் செய்தபோது பத்மா அவருக்கு தனது ஆதரவை தெரிவித்தார். ஜான்சிராணி வெற்றி பெற்று ஊர்வலமாக சென்றபோது பத்மாவும் அவருடன் ஊர்வலத்தில் கலந்து கொண்டார்.

மேலும் செய்திகள்