நிலுவை அகவிலைப்படியை உடனடியாக வழங்க கோரி போக்குவரத்து கழக தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

நிலுவையில் உள்ள அகவிலைப்படியை உடனடியாக வழங்க கோரி போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2020-02-04 22:45 GMT
கரூர், 

கரூர் மாவட்ட போக்குவரத்து கழக தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கரூர் திருமாநிலையூர் போக்குவரத்து கழக பணிமனை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனம் மாநில தலைவர் ஷாஜகான் தலைமை தாங்கினார். தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகி வேணுகோபால் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், போக்குவரத்து கழகத்தில் 13-வது ஊதியக்குழு ஒப்பந்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். 1,000 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த போக்கு வரத்து கழக தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.

நிலுவையிலுள்ள அகவிலைப்படியை உடனடியாக வழங்கிட வேண்டும். புதிய தொழிலாளர்களுக்கும் பழைய பென்சன் திட்டத்தையே அமல்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், தொழிற்சங்க நிர்வாகிகள் சி.ஐ.டி.யு. தண்டபாணி, துரைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்