சேதுபாவாசத்திரம் பகுதியில் கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணி

சேதுபாவாசத்திரம் பகுதியில் கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

Update: 2020-02-06 22:30 GMT
சேதுபாவாசத்திரம்,

தீவிரவாதிகள் தமிழகத்துக்குள் ஊடுருவதை தடுக்கும் வகையில் சேதுபாவாசத்திரம் கடல் பகுதிகளில் ‘‘சகார் கவாச்’’ என்ற பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. கடலோர பாதுகாப்பு குழுமம், சட்ட ஒழுங்கு போலீசார், மீன்வளத்துறை ஆகியோர் ஒத்திகை நிகழ்ச்சியில் இணைந்து செயல்பட்டனர்.

அப்போது கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து சேதுபாவாசத்திரம் பகுதியில் வாகன சோதனை மற்றும் கடலோர பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் நடைபெற்றன. அதேபோல் கடலோர காவல் குழும போலீசாரும், மீன்வளத்துறை அதிகாரிகளும் இணைந்து படகுகள் மூலம் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு கவசம்

அப்போது மீனவர்களிடம் கடலில் சந்தேகப்படும்படியான பொருட்கள் தென்பட்டாலோ, சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் இருந்தாலோ அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

மேலும் மீன் பிடிக்க செல்லும் போது அடையாள அட்டை, பாதுகாப்பு கவசம் ஆகியவற்றை எடுத்து செல்ல வேண்டும் என அதிகாரிகள், மீனவர்களுக்கு அறிவுறுத்தினர். இந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) மாலை வரை நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்