வளர்ச்சி திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் பணி ஆய்வு

அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆதனக்குறிச்சி கிராமத்தில் நடைபெற்று வரும் பாரத பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் ரத்னா நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2020-02-11 22:30 GMT
அரியலூர்,

இந்த ஆய்வின்போது கலெக்டர் கறுகையில், அரியலூர் மாவட்டத்தில் செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் பாரத பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் 1,356 வீடுகள் தேர்வு செய்யப்பட்டு, தலா ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் 854 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, 502 வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

செந்துறை ஒன்றியத்திற்குட்பட்ட ஆதனக்குறிச்சி பகுதியில் கட்டப்பட்டு வரும் வீடுகள் தரமானவைகளாக எனவும், சரியான அளவில் கட்டப்பட்டுள்ளனவா எனவும் ஆய்வு செய்யப்பட்டு, பணிகள் அனைத்தும் விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், ஆதனக்குறிச்சி ஊராட்சி, புதுபாளையம் பெரியவாரியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சத்து 90 ஆயிரத்தில் சிமெண்டு கான்கிரீட் தடுப்பணை கட்டுவதற்கான இடத்தினை தேர்வு செய்து பொதுமக்கள் பயன்படும் வகையில் தடுப்பணை அமைக்கப்படும் என்றார்.

ஆய்வின்போது திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவாஜி, ஸ்ரீதேவி மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்