'சைக்கோ' கொலைகாரன் குறித்து முக்கிய துப்பு கிடைத்து உள்ளது போலீஸ் கமி‌‌ஷனர் செந்தில்குமார் தகவல்

‘சைக்கோ‘ கொலைகாரன் குறித்து முக்கிய துப்பு கிடைத்து உள்ளது என்று போலீஸ் கமி‌‌ஷனர் செந்தில்குமார் கூறினார்.

Update: 2020-02-11 22:30 GMT
சேலம்,

சேலம் மாநகர போலீஸ் சார்பில் பொது மக்கள் குறை தீர்க்கும் முகாம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு போலீஸ் கமி‌‌ஷனர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். பின்னர் பொது மக்களிடம் இருந்து குறைகள் அடங்கிய மனுக்கள் பெற்றார். அதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சேலம் மாநகரில் உள்ள போலீஸ் நிலையங்களில் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் பொது மக்களிடம் இருந்து 4,915 புகார் மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் குறித்து அந்தந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நடவடிக்கை எடுத்தனர். இதில் 228 மனுதாரர்கள் விசாரணையில் திருப்தி இல்லை என தெரிவித்தனர். அவர்களை நேரில் வரவழைத்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு தீர்வு காணப்பட்டு உள்ளன.

இன்று (நேற்று) நடைபெற்ற முகாமில் 90 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 70 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. மற்ற மனுக்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும். மேலும் சேலம் மாநகரில் சமீபத்தில் நள்ளிரவில் 3 முதியவர்கள் கொலை செய்யப்பட்டது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில் ‘சைக்கோ‘ வாலிபர் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்து உள்ளது.

எனவே ‘சைக்கோ‘ கொலைகாரன் குறித்து முக்கிய துப்பு கிடைத்து உள்ளது. அதை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். இதில் துணை கமி‌‌ஷனர் தங்கதுரை உள்பட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்