பகவதி அம்மன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.23½ லட்சம்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த 17 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளது. அந்த உண்டியல்கள் நேற்று திறந்து எண்ணப்பட்டது.

Update: 2020-02-12 22:00 GMT
கன்னியாகுமரி, 

குமரி மாவட்ட திருக்கோவில் இணை ஆணையர் அன்புமணி, இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ரெத்தினவேல் பாண்டியன், முதுநிலை கணக்கர் இங்கர்சால், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் தங்கம் ஆய்வாளர் ராமலட்சுமி, பகவதி அம்மன்கோவில் மேலாளர் ஆறுமுகநயினார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கேப் பொறியியல் கல்லூரி, அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி மாணவ–மாணவிகள், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி செவ்வாடை பெண் பக்தர்கள் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதில் ரூ.23 லட்சத்து 72 ஆயிரத்து 18, தங்கம் 9 கிராம் 200 மில்லி கிராம், வெள்ளி 508 கிராம் மற்றும் வெளிநாட்டு பணங்களும் கிடைத்தன.

மேலும் செய்திகள்