குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி விக்கிரமசிங்கபுரத்தில் மனித சங்கிலி போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி, விக்கிரமசிங்கபுரத்தில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

Update: 2020-02-12 22:00 GMT
விக்கிரமசிங்கபுரம்,

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி, விக்கிரமசிங்கபுரத்தில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

மனித சங்கிலி போராட்டம் 

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி, தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் விக்கிரமசிங்கபுரத்தில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர்கள் ரவீந்திரன், ஷேக் தாவூது, ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

விக்கிரமசிங்கபுரம் சந்தன மாரியம்மன் கோவில் முன்பிருந்து தனியார் திரையரங்கு வரையிலும் சாலையோரம் ஏராளமானவர்கள் கைகோர்த்து மனித சங்கிலியாக நின்றனர்.

திரளானவர்கள் பங்கேற்பு 

இதில் தி.மு.க. நகர செயலாளர் கணேசன், நகர காங்கிரஸ் தலைவர் செல்லத்துரை, இந்திய கம்யூனிஸ்டு நகர பொறுப்பாளர்கள் கண்ணன், முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர பொறுப்பாளர்கள் சுரேஷ்பாபு, இசக்கிராஜன், மதசார்பற்ற ஜனதா தளம் மாவட்ட தலைவர் ஜெபஸ் பொன்னையா, தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வக்கீல் முகமது ‌ஷபி உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்றவர்கள், மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, கோ‌ஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்