லஞ்சம் வாங்கிய வழக்கில் சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் கமிஷனர் உத்தரவு

லஞ்சம் வாங்கிய வழக்கில் தாராவி போலீஸ் நிலைய சீனியர் இன்ஸ்பெக்டரை பணி இடைநீக்கம் செய்து மும்பை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

Update: 2020-02-12 22:15 GMT
மும்பை,

மும்பை தாராவியை சேர்ந்த நடைபாதை வியா பாரியிடம் கடந்த மாதம் 17-ந்தேதி தாராவி போலீஸ் நிலைய போலீஸ்காரர்களான சஞ்சய் தலேக்கர், முகுந்த் ஷிண்டே ஆகியோர் இந்த இடத்தில் வியாபாரம் செய்ய வேண்டுமெனில் தங்களுக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என கேட்டு மிரட்டி உள்ளனர்.

இதற்கு பணம் தருவதாக கூறிவிட்டு சென்ற வியாபாரி சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இந்தநிலையில் வியாபாரி, போலீஸ்காரர்களிடம் லஞ்சப்பணத்தை கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்சஒழிப்பு போலீசார் இருவரையும் கையும், களவுமாக கைது செய்தனர்.

பணி இடைநீக்கம்

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், லஞ்சம் வாங்கிய வழக்கில் தாராவி சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாட்டீலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி உதவி போலீஸ் கமிஷனர், மும்பை போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தார்.

இதன்படி தாராவி சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாட்டீலை பணி இடைநீக்கம் செய்து கமிஷனர் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்