கிரு‌‌ஷ்ணகிரியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சி - கலெக்டர் தொடங்கி வைத்தார்

கிரு‌‌ஷ்ணகிரியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சியை கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்.

Update: 2020-02-16 22:30 GMT
கிரு‌‌ஷ்ணகிரி, 

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் விற்பனை கண்காட்சி கிரு‌‌ஷ்ணகிரி சாந்தி திருமண மண்டபத்தில் தொடங்கியது. இந்த கண்காட்சி வருகிற 25-ந் தேதி வரை நடக்கிறது.

இந்த கண்காட்சியை மாவட்ட கலெக்டர் டாக்டர் எஸ்.பிரபாகர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இந்த கண்காட்சியில் 70 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்று அவர்கள் தயாரிக்கும் பொருட்களான மென்பொருட்கள், பொம்மைகள், மண்பாண்ட பொருட்கள், புளி, ஊறுகாய், பாக்குமட்டை தட்டுகள், பாசிமணி, புடவைகள், காட்டன் சுடிதார்கள், அலங்கார மலர் மாலைகள்,நவநாகரிக அணிகலன்கள், தின்பண்டங்கள், பனைவெல்லம், கைப்பைகள், பரிசு பொருட்கள் உள்ளிட்டவை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

இந்த கண்காட்சி தொடக்க நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி, உதவி திட்ட அலுவலர்கள் பிரபாகரன், பெருமாள், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்க மேலாளர் லோகரட்சகி, வட்டார மேலாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்