திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தண்டராம்பட்டு தாலுகா கீழ்ராவந்தவாடி கிராமத்தை சேர்ந்தவர் விஜி (வயது 22). இவர் நகை பறிப்பு உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு தண்டராம்பட்டு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2020-02-18 22:00 GMT
திருவண்ணாமலை, 

பெருங்குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜூன் (30). இவரும் கீழ்பென்னாத்தூர் தாலுகா அண்டம்பள்ளம் கிராமத்தை சேர்ந்த ராமு என்ற ராமசாமி என்பவரும் வெளிமாநில மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்று வந்தனர். இதுகுறித்து தானிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.

விஜி, அர்ஜூன், ராமசாமி ஆகியோர் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் தண்டராம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதியின் வேண்டுகோளுக்கு இணங்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதற்கான நகல் வேலூர் மத்திய சிறையில் உள்ள அவர்களிடம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்