குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி முஸ்லிம்கள் 4-வது நாளாக காத்திருப்பு போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி முஸ்லிம்கள் 4-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-02-18 23:15 GMT
கூத்தாநல்லூர்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும், சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரியும் கூத்தாநல்லூரில் கடந்த 15-ந் தேதி முதல் முஸ்லிம் அமைப்பு சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் இரவு, பகலாக நடந்து வருகிறது. நேற்று 4-வது நாளாக போராட்டம் நீடித்தது.

இதில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும். அதனை சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

இந்த போராட்டத்தில் இஸ்லாமிய பெண்கள், குழந்தைகள், முஸ்லிம்கள், இதர அமைப்பை சேர்ந்தவர்கள், அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்