காரைக்கால் மாவட்ட மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுப்பேன் கலெக்டர் பேட்டி

காரைக்கால் மாவட்டமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுப்பேன்’ என்று கலெக்டர் அர்ஜூன் சர்மா கூறினார்.

Update: 2020-02-18 23:38 GMT
காரைக்கால்,

புதுச்சேரி மாநிலத்தில் பணியாற்றி வந்த அதிகாரிகளுக்கு சமீபத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதேபோல் புதுவையில் பணியாற்றி வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் காரைக்கால் மாவட்ட கலெக்டராக இருந்த விக்ராந்த் ராஜா, புதுச்சேரி முதல்-அமைச்சரின் செயலராக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக புதுவையில் பணியாற்றி வந்த அர்ஜூன் சர்மா காரைக்கால் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.

இந்தநிலையில் காரைக்கால் மாவட்ட கலெக்டராக அர்ஜூன் சர்மா பதவியேற்று கொண்டார். அப்போது அவரிடம், விக்ராந்த்ராஜா பொறுப்புகளை முறைப்படி ஒப்படைத்தார். நிகழ்ச்சியில் துணை கலெக்டர்கள் ஆதர்ஷ், பாஸ்கரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் வீரவல்லபன், ரகுநாயகம் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

அடிப்படை தேவை...

புதிய கலெக்டராக பதவி ஏற்றுக்கொண்ட அர்ஜூன்சர்மா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து செய்வேன். மக்களுக்காக உழைக்கும் அரசு அதிகாரிகள் குழு உள்ளனர். மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுப்பேன்’ இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்