நாமக்கல்லில் அரசு அலுவலர்களுக்கான விளையாட்டு போட்டி

நாமக்கல்லில் அரசு அலுவலர்களுக்கான விளையாட்டு போட்டி நடந்தது.

Update: 2020-02-19 22:08 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்களுக்கான விளையாட்டு போட்டி நேற்று நாமக்கல்லில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் அனந்த நாராயணன் முன்னிலை வகித்தார்.

இதைத்தொடர்ந்து ஆண்களுக்கு 100 மீ, 200 மீ, 800 மீ மற்றும் 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகளும், பெண்களுக்கான 100 மீ, 200 மீ, 400 மீ, 800 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகளும், கபடி, கைப்பந்து மற்றும் கால்பந்து போன்ற குழு போட்டிகளும் நடத்தப்பட்டது.

பரிசு

இதேபோல் மாவட்ட பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கத்தில் இறகுபந்து போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் மாவட்டம் முழுவதும் இருந்து 300 அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றிபெற்ற அணியினருக்கு இன்று (வியாழக்கிழமை) பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட இருப்பதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் துர்காமூர்த்தி தெரிவித்தார்.

மேலும் இன்று நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் பள்ளியில் கூடைப்பந்து போட்டியும், ஆபீசர்ஸ் கிளப்பில் டென்னிஸ் போட்டியும், நாமக்கல் விக்டோரியா ஹாலில் மேசைப்பந்து போட்டியும் நடைபெற இருப்பதாக அவர் கூறினார்.

மேலும் செய்திகள்