ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி குமரகோட்டம் முருகன் கோவிலில் வெள்ளித்தேர் இழுப்பு

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி புகழ் பெற்ற காஞ்சீபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில், வெள்ளித்தேர் இழுப்பு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2020-02-20 05:06 GMT
அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் ஏற்பாட்டின் பேரில், தமிழக பாடநூல் நிறுவன தலைவர் பா.வளர்மதி, காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டு வெள்ளித்தேரை இழுத்து, முருகப்பெருமானை வழிபட்டனர்.

பிறகு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானங்கள் வழங்கப்பட்டது.

உத்திரமேரூர் முருகன் கோவிலிலும் வெள்ளித்தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதை தொர்ந்து உத்திரமேரூர் பஸ் நிலையத்தில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஜெயலலிதாவின் உருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் அதில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களை வாலாஜாபாத் கணேசன் சால்வை அணிவித்து வரவேற்றார். இதில் உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர்கள் தங்கபஞ்சாட்சரம், கே.ஆர்.தர்மன், பிரகாஷ்பாபு உள்பட ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்