மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

காரையூர் அருகே உள்ள ஒலியமங்களத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.

Update: 2020-02-21 21:45 GMT
காரையூர், 

 மக்கள் தொடர்பு முகாமிற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் கிரு‌‌ஷ்ணன், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் டெய்சிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

முகாமில், பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை அடங்கிய 185 மனுக்கள் பெறப்பட்டது. 

முகாமில் இலவச பட்டா, இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகை, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் திருமண உதவித்தொகை, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, பட்டா மாறுதல் என 258 பயனாளிகளுக்கு ரூ.32 லட்சத்து 27 ஆயிரத்து 476 மதிப்பிலான நலத்திட்ட உதவித்தொகைகளை மாவட்ட வருவாய் அதிகாரி வழங்கினார். 

இதில் பொன்னமராவதி தாசில்தார் திருநாவுக்கரசு, தனி தாசில்தார் சங்கரகாமேஸ்வரன், தலைமையிடத்து துணை தாசில்தார் வெள்ளைச்சாமி, மண்டல துணை தாசில்தார் ராஜா உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்