ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயன்றவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது போலீஸ் கமிஷனர் நடவடிக்கை

ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயன்றவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2020-02-21 22:15 GMT
சென்னை, 

சென்னை மயிலாப்பூர் தியாகராஜபுரத்தில் ஆடிட்டரும், ‘துக்ளக்’ பத்திரிகை ஆசிரியருமான எஸ்.குருமூர்த்தி வீடு உள்ளது. இவருடைய வீட்டின் மீது கடந்த ஜனவரி மாதம் 24-ந்தேதி பெட்ரோல் வெடிகுண்டு வீசும் முயற்சி நடைபெற்றது.

இதுதொடர்பாக மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த சசிகுமார்(வயது 33), தீபன்(32), ஜனார்த்தனன்(36), பாலு(30), பிரசாந்த்(23), வாசுதேவன்(32), குமரன்(42), கண்ணன்(27), சக்தி(22), தமிழ்(23) ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மயிலாப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு பரிந்துரை செய்திருந்தார்.

அதனை ஏற்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த 10 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் செய்திகள்