தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.4.13 கோடியில் இருதய சிகிச்சைக்கான அதிநவீன ஆய்வகம் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.4.13 கோடியில் இருதய சிகிச்சைக்கான அதிநவீன ஆய்வகத்தை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

Update: 2020-02-22 23:30 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.4.13 கோடியில் இருதய சிகிச்சைக்கான அதிநவீன ஆய்வகத்தை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

அதிநவீன ஆய்வகம் 

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுநீரகம் செயலிழந்த நோயாளிகளுக்கு ரத்தம் சுத்திகரிப்பதற்காக ரூ.50 லட்சத்தில் 7 ரத்த சுத்திகரிப்பு கருவிகள் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளன.

மேலும், ரூ.4.13 கோடியில் இருதய நோயாளிகளின் சிகிச்சைக்காக ‘கேத்லேப்’ எனப்படும் அதிநவீன ஆய்வகம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார் 

இதன் திறப்பு விழா நேற்று மதியம் நடந்தது. விழாவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, ஆய்வகத்தை திறந்து வைத்து கருவிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். அப்போது கருவிகளின் செயல்பாடுகள் குறித்து டாக்டர்கள் விளக்கி கூறினர்.

விழாவில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கள், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ், மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார், மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன், மருத்துவக்கல்லூரி டீன் திருவாசகமணி, ஆஸ்பத்திரி உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முதல்–அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்