அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி; அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

கரூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் கரூர் பஸ் நிலையத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதனை நேற்று காலை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

Update: 2020-02-22 22:00 GMT
கரூர், 

கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். கண்காட்சியில் தமிழக அரசின் 3 ஆண்டு சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து விளக்கும் வகை யிலும், பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் தொடர்பான புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இதனை பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பலர் பார்வையிட்டு சென்றனர். 

தமிழக அரசின் 3 ஆண்டு சாதனைகளை விளக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள வீடியோ தொகுப்பினை செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு விளம்பர வாகனத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. 

நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், ம.கீதா எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, திருச்சி மத்திய கூட்டுறவுவங்கித்தலைவர் காளியப்பன், வருவாய் கோட்டாட்சியர் சந்தியா, நகராட்சி ஆணையர் சுதா, மாவட்ட ஊராட்சித்தலைவர் எம்.எஸ்.கண்ணதாசன், துணைத் தலைவர் தானே‌‌ஷ் என்கிற முத்துகுமார், கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் நெடுஞ்செழியன், கரூர் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் பாலமுருகன், தொலைபேசி ஆலோசனைக்குழு உறுப்பினர் சிவசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்