மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்

சிவகங்கை அருகே நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 224 பயனாளிகளுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.

Update: 2020-02-22 23:30 GMT
சிவகங்கை,

சிவகங்கையை அடுத்த மாங்குடி தெற்குவாடி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினா் நாகராஜன் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட அமைச்சர் பாஸ்கரன் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் அவர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில் 69 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இயற்கை மரண நிவாரண நிதியுதவி மற்றும் 33 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல், வீட்டுமனைப்பட்டா, மாவட்ட மகளிர் திட்டத் துறையின் மூலம் 102 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.

கண்காட்சி

வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறையின் மூலம் 7 பேருக்கு நலத்திட்ட உதவியும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் 3 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 10 ஆயிரம் மகளிர் சுயஉதவிக்குழு கடனும், சுகாதாரத்துறையின் மூலம் 10 பயனாளிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் தொகை, அம்மா மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகமும் சேர்த்து மொத்தம் 224 பயனாளிகளுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் லதா, மகளிர் திட்ட அலுவலா் அருண்மணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனா் வடிவேல், மாவட்ட சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் காளிமுத்தன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியா் சிந்து, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவா் சந்திரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராமசாமி, சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் மஞ்சுளாபாலசந்தர், துணைத்தலைவர் கேசவன், தாசில்தார்கள் மைலாவதி, பாலசுப்பிரமணியன், வட்டார வளா்ச்சி அலுவலர் ரஞ்சனிதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக செய்தி மக்கள் தொடர்புதுறை சார்பில் நடைபெற்ற சாதனை விளக்க கண்காட்சியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

மேலும் செய்திகள்