மாவட்டம் முழுவதும் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

Update: 2020-02-24 22:15 GMT
திண்டுக்கல்,

மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் மருதராஜ் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதில் அபிராமி கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பாரதிமுருகன், துணை தலைவர் வி.டி.ராஜன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் ஸ்கீம் ரோட்டில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் தலைமையில், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் திருமாறன் முன்னிலையில் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் கோபாலகிரு‌‌ஷ்ணன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் ராமமூர்த்தி, வடக்கு பகுதி மாவட்ட பிரதிநிதி ரவிச்சந்திரன், ஊராட்சி செயலாளர்கள் நாகராஜ், முனுசாமி, முத்து, சிறுமலை ஒன்றிய கவுன்சிலர் கனிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சாணார்பட்டி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில், கோபால்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின்உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கு சாணார்பட்டி அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராமராஜ் தலைமை தாங்கினார். நத்தம் ஒன்றியக்குழு தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தார். இதில் அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய நிர்வாகிகள் சுப்பிரமணி, செல்வராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் ரமே‌‌ஷ்பாபு, ஹரிகரன், கண்ணன் மற்றும் நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

சின்னாளபட்டியில், ஆத்தூர் ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி.கே.டி.நடராஜன் தலைமையில் நிர்வாகிகள் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆத்தூர் ஒன்றிய முன்னாள் தலைவர் கோபி, மாவட்ட மீனவரணி இணை செயலாளர் அந்தோணிசாமி, பித்தளைப்பட்டி வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் ஆலமரத்துப்பட்டியில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் மாநில பொதுக்குழு உறுப்பினர் கண்ணன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

பழனி அருகே உள்ள ஆண்டிப்பட்டியில், ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மாவட்ட ஆவின் தலைவரும், ஆண்டிப்பட்டி ஊராட்சி தலைவருமான ஏ.டி.செல்லசாமி தலைமை தாங்கி பொதுமக்களுக்கு அன்னதானத்தை வழங்கினார். முன்னதாக ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகி மயில்சாமி, ஒன்றிய கவுன்சிலர் ரமே‌‌ஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.இதேபோல் பழனி பஸ்நிலைய ரவுண்டானா அருகே ஜெயலலிதா உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. இதில் அ.தி.மு.க. நகர செயலாளர் முருகானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ.வேணுகோபால், ஒன்றிய செயலாளர் முத்துசாமி, மாணவரணி மாவட்ட செயலாளர் அன்வர்தீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கொடைக்கானல் நகர அ.தி.மு.க. சார்பில், ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி 20-க்கும் மேற்பட்ட இடங்களில் அவரது உருவ படங்கள் வைக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இதற்கு நகர அ.தி.மு.க. செயலாளர் எம்.ஸ்ரீதர் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதில் நகர அவை தலைவர் ஜான்தாமஸ், துணை செயலாளர் ஜாபர் சாதிக், ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் செல்வம், மாவட்ட நிர்வாகி பிச்சை, நகர நிர்வாகிகள் ஆவின்பாரூக், முகமது முஸ்தபா, ஜெயசுந்தரம், சுதாகர், அழகு வினோத் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்