வாழ்க்கையில் முன்னேற மாணவிகளுக்கு கல்வி அவசியம் அரசு பள்ளி விழாவில் அமைச்சர் காமராஜ் பேச்சு

வாழ்க்கையில் முன்னேற மாணவிகளுக்கு கல்வி அவசியம் என்று அரசு பள்ளி விழாவில் அமைச்சர் காமராஜ் பேசினார்.

Update: 2020-02-24 23:00 GMT
நன்னிலம்,

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், பேரளம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா, இலக்கிய மன்ற விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் தலைமை தாங்கினார். நன்னிலம் ஒன்றியக்குழு துணைத்தலைவர் அன்பழகன், பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் பாண்டித்துரை, முன்னாள் பேரூராட்சி தலைவர் கனகவள்ளி சுந்தரமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், கூட்டுறவு சங்க தலைவர் புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கல்வி அவசியம்

மாணவிகளுக்கு வாழ்க்கையில் முன்னேறுவதற்கு கல்வி அவசியம் என்றும் எதிர்காலத்தில் மாணவிகள் உயர் பதவிகள் பெறவேண்டுமென்றால் அடிப்படை கல்விதான் முக்கியம். விலையில்லா சைக்கிள், விலையில்லா மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. காவிரி டெல்டாவை வேளாண் மண்டலமாக தமிழக முதல்-அமைச்சர் அறிவித்து அரசாணை வெளியிட்டார். இதனால் விவசாயிகள் அச்சமின்றி விவசாய பணிகளில் ஈடுபடலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்