கிரு‌‌ஷ்ணகிரியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்பு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடந்தது

கிரு‌‌ஷ்ணகிரியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி தலைமையில் நடந்தது.

Update: 2020-02-24 23:30 GMT
கிரு‌‌ஷ்ணகிரி,

கிரு‌‌ஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும், விழிப்புணர்வு ஊர்வலமும் நடந்தது. இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி தலைமை தாங்கி உறுதிமொழியை படித்தார். அதை மாணவிகள் திரும்ப படித்து ஏற்றுக் கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று, மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேந்திரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

உறுதிமொழி ஏற்பு

முன்னதாக கிரு‌‌ஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி தலைமை தாங்கி உறுதிமொழியை படிக்க அனைத்து அரசு அலுவலர்களும் அதனை திரும்ப படித்து ஏற்றுக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமமூர்த்தி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்