ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம்

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Update: 2020-02-24 23:06 GMT
சிவகங்கை,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த தினத்தையொட்டி சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் காரைக்குடி ஐந்து விளக்கு அருகே உள்ள ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான பி.ஆர்.செந்தில் நாதன் தலைமையில், அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து காரைக்குடி ெரயில்வே பீடர், அண்ணா நகர், வாட்டர் டேங்க், அமராவதி புதூர் ஆகிய இடங்களில் அ.தி.மு.க. கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. முன்னதாக வைரவன்பட்டி, பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, பாதரக்குடி ஆகிய பகுதிகளில் கட்சிக்கொடி ஏற்றப்பட்டது. பிறந்தநாளையொட்டி மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. மேலும் அமராவதிபுதூரில் இளைஞரணி சார்பில் 120 மாணவ-மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளரும் ஆவின் சேர்மனுமான அசோகன், காரைக்குடி நகர செயலாளர் மெய்யப்பன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கற்பகம் இளங்கோ, சோழன் பழனிச்சாமி, சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், சாக்கோட்டை யூனியன் தலைவர் சரண்யா செந்தில்நாதன், ஜெயலலிதா பேரவை மாவட்ட துணை செயலாளர் பாலா, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்கள் ஆம்பகுடி வீரசேகர், முருகையா, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளர் தேவன், மகளிரணி சோபியா லாரன்ஸ், காளீஸ்வரிதேவன், அண்ணா தொழிற்சங்க மின்சார பிரிவு மாவட்ட பொருளாளர் மின்பொறி ஆறுமுகம், மாவட்ட பாம்கோ இயக்குனர் இயல்தாகூர் மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல் மானாமதுரை எம்.எல்.ஏ. நாகராஜன் ஏற்பாட்டில் மானாமதுரை செவி திறன் குறைபாடுடைய குழந்தைகள் நல பள்ளி, ஹோலி கிராஸ் முதியோர் இல்லம், பூவந்தி முதியோர் இல்லம் ஆகிய இடங்களில் உள்ள முதியோர், மாணவர்களுக்கு உணவு வழங்கி ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில் நாதன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மானாமதுரை யூனியன் ஒன்றிய கவுன்சிலர் ஸ்ரீதர் பஞ்சவர்ணம், சிவா கன்ஸ்ட்ரக்‌ஷன் ஸ்ரீதர், சின்னகண்ணனூர் ஊராட்சி கழக செயலாளர் வேலுச்சாமி, அ.தி.மு.க. பிரதிநிதி வேம்பத்தூர் அழகுமலை, குமாரகுறிச்சி விஜயகுமார், இளையான்குடி தெற்கு சமுத்திரம் ஊராட்சி கழக செயலாளர் ஜெகதீஸ்வரன் உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மானா மதுரை பழைய ஆஸ்பத்திரி அருகே ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

இதேபோல் தேவகோட்டையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளரும் தேவகோட்டை யூனியன் தலைவருமான பிர்லா கணேசன் ஏற்பாட்டில், நிர்மல் பள்ளியில் பயிலும் மனவளர்ச்சி குன்றிய மாணவ-மாணவிகளுக்கு ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி உணவு வழங்கப்பட்டது. இதில் மாநில மாணவரணி இணை செயலாளர் வழக்கறிஞர் ஆசைத்தம்பி கலந்துகொண்டார். இதையொட்டி சருகணி விலக்கு அருகே யூனியன் கவுன்சிலர் சந்திரா கட்சிக்கொடியேற்றி வைத்தார். நிகழ்ச்சியில் பிர்லா கணேசன், தேவகோட்டை ஒன்றிய செயலாளர் தசரதன், யூனியன் துணைத்தலைவர் புதுகுறிச்சி நடராஜன் உள்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்