மக்கள் தொடர்பு முகாமில், 107 பேருக்கு நலத்திட்ட உதவி

மக்கள் தொடர்பு முகாமில் 170 பேருக்கு ரூ.4 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Update: 2020-02-26 21:30 GMT
எஸ்.புதூர்,

எஸ்.புதூர் அருகே உள்ள வலசைபட்டி கிராமத்தில் தமிழக அரசின் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் சங்கரநாராயணன் தலைமை தாங்கினார். வலசைபட்டி ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள் பழனிச்சாமி வரவேற்றார். வேளாண்மைத்துறை சார்பில் துணை வேளாண்மை அலுவலர் ஞானசேகரன், தோட்டக்கலை துறை சார்பில் உதவி இயக்குனர் ரேகா, சமூக பாதுகாப்பு திட்டம் துறை சார்பில் தனி தாசில்தார் செல்வராணி, வருவாய்துறை சார்பில் மண்டல துணை தாசில்தார் சாந்தி, உணவு வழங்கல் பாதுகாப்பு துறை சார்பில் வட்ட வழங்கல் அலுவலர் லெனின், உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் எஸ்.புதூர் ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சையது இப்ராஹிம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் நல்லம்மாள், மருத்துவத்துறை சார்பில் மருத்துவ அலுவலர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு அரசுத்துறை திட்டங்கள் குறித்து எடுத்துக்கூறினர். அதனை தொடர்ந்து 107 பேருக்கு ரூ.4 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முகாமில் பொதுமக்களிடமிருந்து 45 மனுக்கள் பெறப்பட்டன. இதில் சிங்கம்புணரி தாசில்தார் பஞ்சவர்ணம், 3-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் ராஜாத்தி சிங்காரம், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மானாமதுரை ஒன்றியத்திற்குட்பட்ட மிளகனூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதில் மானாமதுரை எம்.எல்.ஏ. நாகராஜன் கலந்துகொண்டு பொது மக்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினர். இதில் திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விபத்தில் மரணம் அடைந்தவர்களுக்கான நிதியுதவி, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல் உள்பட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் வருவாய் கோட்டாட்சியர் சிந்து, வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சுந்தரமகாலிங்கம், அழகுமீனா, வட்ட வழங்கல் அதிகாரி மலைச்சாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்