ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி

அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சிமன்ற தலைவர்களுக்கான பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த திறன் வளர்ப்பு பயிற்சி நடைபெற்றது.

Update: 2020-02-28 22:00 GMT
செந்துறை, 

திறன் வளர்ப்பு பயிற்சிக்கு ஒன்றியக்குழு தலைவர் தேன்மொழி சாமிதுரை தலைமை தாங்கினார். அணி உறுப்பினர் செல்வம் வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீதேவி, சிவாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பயிற்சியில் செந்துறை ஒன்றியத்தில் உள்ள 30 ஊராட்சி மன்ற தலைவர்களும், ஊராட்சி செயலாளர்களும் கலந்து கொண்டனர். 

பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வழக்கறிஞர் பாஸ்கர் இளம் வயதில் பெண்கள் திருமணம் செய்தலை தடுப்பது குறித்தும், பாலியல் ரீதியாக பெண் குழந்தைகள் துன்புறுத்தப்படுவதைஎவ்வாறு தடுப்பது மற்றும் அதற்கான வழிமுறைகள் குறித்தும் பயிற்சி அளித்தார். முடிவில் அணி உறுப்பினர் பரமசிவம் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்