சமூகவலைதளத்தை மோடியின் பக்தர்கள் கைவிட்டால் நாடு அமைதியடையும்; தேசியவாத காங்கிரஸ் கிண்டல்

பிரதமர் நரேந்திர மோடி தனது பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூ-டியூப் ஆகிய சமூக வலைதள கணக்குகளில் இருந்து விலக யோசித்து வருவதாக டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

Update: 2020-03-03 22:48 GMT
மும்பை, 

பிரதமரின் இந்த முடிவை வரவேற்பதாக தேசியவாத காங்கிரஸ் கிண்டல் செய்து உள்ளது. இது குறித்து அந்த கட்சியை சேர்ந்த மராட்டிய மந்திரி நவாப் மாலிக் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை முதல் சமூக ஊடகங்களை கைவிடுவதற்கான குறிப்பை தெரிவித்தார். அவரது அனைத்து பக்தர்களும் அதை கைவிட்டால் நாடு அமைதியடையும். மோடியின் முடிவு நாட்டின் நலனுக்காக இருக்கும். நாங்கள் அதை வரவேற்கிறோம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்