நீடாமங்கலத்தில் இருந்து சென்னைக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது

நீடாமங்கலத்தில் இருந்து சென்னைக்கு 2 ஆயிரம் டன் நெல் அரவைக்காக சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2020-03-12 22:30 GMT
நீடாமங்கலம்,

விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு அரவைக்காக மாவட்டத்தில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் வெளி மாவட்டங்களில் உள்ள ஆலைகளுக்கு அரவைக்காக நெல் மூட்டைகள் சரக்கு ரெயில்களில் அனுப்பப்படுகிறது.

அதன்படி நீடாமங்கலத்தில் இருந்து சென்னைக்கு 2 ஆயிரம் டன் சன்னரக நெல் அரவைக்காக சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. இதையொட்டி நீடாமங்கலம், மன்னார்குடி, கூத்தாநல்லூர் பகுதிகளில் இயங்கி வரும் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகள் 154 லாரிகள் மூலம் நீடாமங்கலம் ரெயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டன. பின்னர் லாரிகளில் இருந்து சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 41 பெட்டிகளில் ஏற்றினர். இதனை தொடர்ந்து நெல் மூட்டைகளுடன் சரக்கு ரெயில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது.

மேலும் செய்திகள்