வழக்கறிஞர் சங்க ஒருங்கிணைப்பு குழுவை சம்மேளனத்துடன் இணைப்பதற்கு வரவேற்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

வழக்கறிஞர் சங்க ஒருங்கிணைப்பு குழுவை சம்மேளனத்துடன் இணைப்பதற்கு வரவேற்பு தெரிவித்து பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2020-03-15 23:00 GMT
திருச்சி,

தமிழ்நாடு- புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டு ஒருங்கிணைப்பு குழுவின் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பு குழு தலைவர் நந்தகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் சகாபுதீன், பொருளாளர் மகேஷ் முன்னிலை வகித்தனர்.

இணைப்புக்கு வரவேற்பு

கூட்டத்தில் தமிழ்நாடு- புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் சம்மேளனத்தையும், சங்க ஒருங்கிணைப்பு குழுவையும் இணைப்பது என்று ‘பார்’ கவுன்சில் தலைவர் முன்னிலையில் ஏற்கனவே நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருப்பதால், அதற்கு வரவேற்பு தெரிவிப்பது. இந்த இரண்டு அமைப்புகளையும் ஒன்றாக இணைப்பதற்கு ஒரு குழு அமைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி ஆலோசிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் தமிழ்நாடு- புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர்கள் ராஜேந்திரகுமார், சிவசுப்பிரமணியன், திருச்சி வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் தலைவர் பன்னீர்செல்வம், செயலாளர் ராஜசேகரன் உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்